“என் குழந்தைக்கு அப்பா வேணும்”.. நீதிமன்றத்தில் போராடும் கண்ணம்மா !

by Column Editor

என் குழந்தைக்கு அப்பா வேணும் என்று நீதிமன்றத்தில் போராடும் கண்ணம்மாவின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பரபரப்பு திருப்பங்களுடன் சென்றுக்கொண்டிருக்கிறது ‘பாரதி கண்ணம்மா’ சீரியல். தனது குழந்தை ஹேமாவை கண்ணம்மாவை பாசம் காட்டி எங்கே பிரித்துவிடப் போகிறார் கண்ணம்மா என்று நினைத்த பாரதி, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். ஆனால் இந்த விவாகரத்தில் உடன்பாடாத கண்ணம்மா, விவாகரத்து கொடுக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறார். இதனால் சீரியலில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மனுதாரரான பாரதியிடம் விசாரணை நடத்துகிறது. அப்போது தன் பக்க நியாயங்களை எடுத்துரைக்கிறார். இதையடுத்து கண்ணம்மாவிடம் விசாரிக்கும் விசாரிக்கும் நீதிமன்றம், உங்களுக்கு எத்தனை குழந்தை, யாரிடம் இப்போது குழந்தை இருக்கிறது என்ற கேள்விகளை கண்ணம்மாவிடம் கேட்கிறது. இதனால் பதற்றமடையும் மாமியார் செளந்தர்யா, உண்மையை கண்ணம்மா சொல்லிவிடுவாரா என்று பயப்பட்டார். ஆனால் கண்ணம்மாவோ, எனக்கு ஒரு குழந்தை என்றும், அது தன்னிடம்தான் இருக்கிறது என்றும் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது கண்ண்மாவிடம் விசாரிக்கும் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் நான்‌ உதவி பண்ணுங்க என்று கணவர் பாரதியிடம் நின்னதேயில்லை. நானே சுயமாக சம்பாதித்து என் குழந்தையை வளர்கிறேன் என்று கண்ணம்மா கூற, அதற்கு நீதிபதி, உங்களுக்கு வேண்டுமென்றால் அவரின் சொத்து தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால் குழந்தை சட்டப்படி வாரிசு என்கிறார். நான் சுயமரியாதையோடு வாழ்ந்துட்டு இருக்கிறேன். எனக்கு பணம் காசு தேவையில்லை. என் தேவையெல்லாம் என் குழந்தைக்கு அப்பா அவ்வளவுதான். அதை சட்டப்படி விட்டு கொடுக்கமாட்டேன் என்று கண்ணம்மா ஆணித்தனமாக நீதிமன்றத்தில் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment