பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர் தான்! வெளியே கசிந்த தகவல்

by Column Editor

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் இசைவாணி குறைந்த வாக்குகள் பெற்று கடைசி இடத்தில் இருப்பதால் இவர் வெளியேறுகின்றார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் மக்களின் தீர்ப்பால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் 9 பேர் நாமினேஷனில் இருக்கின்றனர்.

அபிநய், அண்ணாச்சி, இசைவாணி, சிபி, நிரூப், அக்ஷரா, ஐக்கி பெர்ரி, தாமரை தெரிவாகியுள்ளார். இந்நிலையில் இந்த வாரம் அபிநய், இமான், இசைவாணி, தாமரை வெளியே செல்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

அபிநய் இந்த வாரம் போட்டியை சரியாக விளையாடி வெளியே தெரிய ஆரம்பித்துள்ளதால், இந்த வாரம் இவர் காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்தபடியாக தொடர்ந்து இரண்டு வாரங்களாக சற்று ஓட்டிங்கில் பின்தங்கிய நிலையில் இருக்கும் அண்ணாச்சியும் வீட்டிலிருந்து வெளியேற வாய்ப்பு உள்ளது.

தாமரை சில வாரங்களாக நாமினேஷன் பட்டியலில் வராமல் தப்பித்து வந்த நிலையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு வந்த நிலையில், சில வாரங்கள் இவர் வெளிப்படுத்திய கோபத்தினால் மக்கள் வெறுப்பினை சம்பாதித்து வருகின்றார்.

ஆனால் இவர்களையெல்லாம் விட கருத்துக்கணிப்பில் இசைவாணி கட்டாயம் வெளியேறப்போகிறார் என்ற தகவல் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் பாவனியுடன் இணைந்து விஷத் தன்மையாக மாறி வருகிறார் இசைவாணி என மக்கள் பலரும் கருதுகின்றனர். சில வாரங்களாகவே இசைவாணியின் நடவடிக்கை போட்டியாளர்களிடமும் மக்களிடமும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள ஓட்டிங் லிஸ்டிலும் இசை வாணியே பின்தங்கியுள்ளார். எனவே இவர் தான் மிகவும் டேஞ்சர் ஷோனில் இருப்பதால், நிச்சயம் இவர் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Posts

Leave a Comment