இந்தளவு அன்பை நான் இதற்கு முன் பார்த்ததில்லை… ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சூர்யா!

by Column Editor

நடிகர் சூர்யா தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அதே நிலையில் ஒரு தரப்பினரின் எதிர்ப்பிற்கும் ஆளாகியுள்ளது. தற்போது சூர்யா மீது குறிப்பிட்ட நபர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சூர்யாவிற்கு மிரட்டல் விடுக்கவும் தொடங்கியுள்ளனர். தற்போது சூர்யா வீட்டிற்க்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் திரைத்துறை பிரபலங்கள் பலர் தற்போது சூர்யாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பத் துவங்கியுள்ளனர். சூர்யா ரசிகர்கள், பொதுமக்கள், திரைத்துறை பிரபலங்கள் பலர் சூர்யாவிற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். தற்போது சூர்யா தனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “அன்பர்களே, ஜெய் பீம் மீதான இந்த அன்பு அலாதியானது. இந்தளவு அன்பை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! நீங்கள் அனைவரும் எங்களுக்கு அளித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. எங்களுடன் நின்றதற்கு மனமார்ந்த நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment