நடிகர் போண்டாமணியின் உடல் மின் மயானத்தில் தகனம்

by Column Editor

மறைந்த நடிகர் போண்டாமணியின் உடல் குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்து மக்களிடம் பாராட்டை பெற்ற நகைச்சுவை நடிகர் போண்டாமணி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தமிழ் சினிமாவில் இலங்கை தமிழ் பேசி நடிக்கும் முக்கிய நடிகர்களில் ஒருவர் போண்டாமணி. இலங்கை தமிழரான இவர், கடந்த 1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜூவின் பவுனு பவுனுதான் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமானார், இதில் மருதமலை, வின்னர், கண்ணும் கண்ணும் உள்ளிட்ட படங்களில் போண்டா மணியின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்தவர் போண்டாமணி. இவர் கடந்த பல மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் பம்மல், பொழிச்சலூரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது . காலை முதலே பல நடிகர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மறைந்த நடிகர் போண்டா மணியின் உடல் மாலை 4 மணியளவில், அவரது இல்லத்தில் இருந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு பல்லாவரம் பொழிச்சலூரில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மாலை 5.30 மணியளவில் குரோம்பேட்டையிள் உள்ள நாகல்கேணி மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Related Posts

Leave a Comment