ரஜினி படங்கள் நரக வேதனை கொடுத்தன: ஓப்பனா பேசிய ஏ.ஆர் ரகுமான்…

by Column Editor

ரஜினி படங்களில் பணியாற்றியது குறித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்துள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர் ரகுமான். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.

கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்ற ஏ.ஆர் ரகுமான் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதாய் வென்றார். இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார்.

அறிமுக இசையமைப்பாளராக இவர் பணியாற்றிய ஜென்டில் மேன், கிழக்கு சீமையிலே உள்ளிட்ட படங்களின் பாடல்கள் இன்றளவும் மனதில் நிற்பவையாக இருக்கின்றனர். கமல், ரஜினி என பிரபலங்கள் பலரின் படங்களில் இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரகுமான் முத்து,சிவாஜி, எந்திரன் மற்றும் 2.0 உட்பட பல ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
படிப்படியாக முன்னேறி இப்போது சிகரம் தொட்டுள்ள ஏ.ஆர் ரகுமானுக்கு சொந்தமாக படப்பிடிப்பு ,தளம் இசைப்பள்ளி, மியூசிக் ஸ்டுடியோ என பல சொந்தமாக உள்ளது.

இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் பேட்டியளித்த ஏ.ஆர்.ரகுமான்; ரஜினி படங்களில் பணியாற்றியது நரக வேதனை அளிப்பதாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

90களில் ரஜினி போன்ற முன்னணி நாயகர்களின் படங்களில் பணியாற்றுயது மிக கடினமான ஒன்றாக இருந்ததாக கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் துவங்கப்படும் படங்கள் அந்த வருட தீபாவளிக்கே வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் சொல்லப்படும். காலம் குறைவாக இருப்பதால் பின்னணி இசையும், பாடல்களையும் விரைவில் செய்து தரும் படி தன்னை வற்புறுத்துவார்கள் என தெரிவித்துள்ளார். அடிக்கடி பவர்கட் செய்யப்படும் ஏரியாவில் தனது ஸ்டுடியோவை வைத்திருந்த ஏ.ஆர் ரகுமான் ஜென்ரேட்டர் உதவியுடன் பல இரவுகள் கடினமாக உழைத்ததாக தெரிவித்துள்ளார்.அந்த காலங்கள் நரகம் என்று கூறிய ஏ.ஆர்.ரகுமான் மற்ற படங்களை காட்டிலும் ரஜினிகாந்த் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியதாயிற்று என்றும் சில நேரங்களில் தன் மீது எரிச்சலையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment