விஸ்வாசம், கைதி பட நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்! சோகத்தில் கண்ணீர்விடும் திரையுலகம்!!

by News Editor
0 comment

நடிகரும், இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் 61 வயது நிறைந்த நிலையில் மாரடைப்பால் இன்று காலமானார்.

தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு நகுல் மற்றும் சுனைனா நடிப்பில் வெளிவந்த மாசிலாமணி என்ற படத்தை இயக்கியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதனை தொடர்ந்து அவர் வேலூர் மாவட்டம் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். மேலும் ஆர்.என்.ஆர்.மனோகர் சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

அது மட்டுமின்றி அவர் சலீம், என்னை அறிந்தால், நானும் ரவுடிதான், வேதாளம், மிருதன், கைதி, விஸ்வாசம் உள்ளிட்ட பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மனோகர் காலமானார். இவரது மறைவு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment