வாயை மூடு நான் அதை தான் செய்தேன், நக்கலாக பாக்குற என்ன?- புதிதாக பிக்பாஸ் வீட்டில் வெடித்த சண்டை

by Column Editor

பிக்பாஸ் நிகழ்ச்சி வர வர சூடு பிடித்து வருகிறது. கண்ணாடி டாஸ்க் என்று கொடுத்து இருவர் இருவராக சேர்த்துவிட்டு பிக்பாஸ் செம பிளான் போட்டார்.

இதில் சிலரது கூட்டணி ஜாலியாக இருந்தது, ஒருசிலரது விளையாட்டு சண்டையில் போய் முடிந்தது.

இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் இசைவாணி மற்றும் தாமரை கண்ணாடி முன் நின்று பேசும் டாஸ்க் செய்துள்ளார்கள். அதில் தாமரை, இசைவாணி குறித்து பேச அது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டாஸ்க் முடிந்ததும் இசைவாணி கோபமாக பேச தாமரைக்கு இவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது.

அவர்கள் பேசியதை பார்த்தால் பெரிய சண்டையில் முடிந்திருக்குமோ என தோன்றுகிறது. கடைசியில் என்ன தான் நடந்தது என்பதை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.

Related Posts

Leave a Comment