என் சேமிப்பு அனைத்தையும் புனீத் பணியைத் தொடர செலவு செய்வேன்… நடிகர் விஷால்!

by Column Editor

விஷால் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், மாரடைப்பு காரணமாக சமீபத்தில் காலமானார். அவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். புனீத் மாதிரியான இரக்க குணம் கொண்ட பார்ப்பது மிகவும் அரிது என்றும் பலர் தெரிவிக்கின்றனர். புனீத் பல சேவைகளையும் செய்து வந்துள்ளார். அதில் ஒன்று 1800 மாணவர்களை இலவசமாகப் படிக்க வைத்து வந்தது. இந்நிலையில் புனீத் மறைவை அடுத்து அந்த 1800 மாணவர்களின் படிப்பை இனி தான் கவனித்துக் கொள்வதாக முன்னதாக விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஷால் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாரின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். பின்னர் பேசிய அவர் “16 வருடங்களாக நடிகராக இருந்தும் எனக்கு சென்னையில் சொந்த வீடு இல்லை, பெற்றோருடன் தான் வசித்து வருகிறேன். ஆனால் நான் எனக்காக ஒரு வீட்டிற்காக பணத்தை சேமித்து வருகிறேன், இந்த சேமிப்பை புனித் ஆதரவளித்த குழந்தைகளுக்காக செலவிடுவேன்.புனித் இறக்கும் வரை பல சமூக நல்ல பணிகளைச் செய்து கொண்டிருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவரது நற்செயல்கள் என்னை மிகவும் ஈர்த்தது. எனவே தான் நான் புனித்தின் பணியைத் தொடர முன்வந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய நான் முழு மனதுடன் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment