சிவகார்த்திகேயன் படத்தில் இசையமைக்கும் தளபதி 66 இசையமைப்பாளர்

by Column Editor

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களிடையே பேராதரவை பெற்று 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

இதனிடையே டான் திரைப்படத்தை தொடர்ந்து எந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என்பது குறித்து எந்தஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை.

மேலும் தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

அதன்படி தற்போது சிவகார்த்திகேயன் – அனுதீப் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தில் இசையமைப்பாளர் தமன் இசையமைக்க உள்ளது உறுதியாகியுள்ளது.

மேலும் தமன் தளபதி 66 திரைப்படத்தில் இசையமைக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment