விஜய் பீஸ்ட் படத்தில் இப்படி ஒரு மொழியில் டயலாக் பேசுகிறாரா?- சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

by Column Editor

மாஸ்டர் படத்தை முடித்த கையோடு விஜய் இளம் இயக்குனர் நெல்சனுடன் கூட்டணி அமைத்துள்ளார். கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களை மட்டுமே இதுவரை அவர் இயக்கியுள்ளார்.

3வது படத்திலேயே விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்டர்நேஷ்னல் லெவலில் படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை, ரஷ்யா என மாற்றி மாற்றி படப்பிடிப்பு நடந்தது, அடுத்தடுத்து நமக்கு படம் குறித்த அப்டேட்டுகளும் வந்தன.

இப்போது படம் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது, அதுவும் விஜய் பற்றி தான். தளபதி ரசிகர்கள் அவரது படத்தை தாண்டி வசனங்களை அதிகம் ரசிப்பார்கள்.

தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் உருது மொழியில் சில வசனங்கள் பேசுகிறாராம். இந்த தகவலை படத்தில் 3 வில்லன்களில் ஒருவராக நடிக்கும் ஷைன்டாம்சாக்கோ மலையாளத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment