Godzilla X Kong: The New Empire திரை விமர்சனம்

by Lifestyle Editor

ஹாலிவுட் படங்களுக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் இந்திய சந்தையில் உள்ளது. அது ஒரு சில படங்கள் புரிந்து கொண்டு பல ஜிகினாக்களை தூவி செமயாக கல்லா கட்டுவார்கள், அப்படி ஒரு ஜிகினா படமாக தான் இந்த Godzilla x Kong: The New Empire படம் வந்துள்ளது, சரி படம் எப்படி பார்ப்போம்.

இதுபோன்ற படங்களில் கதை என்று என்ன உள்ளது, இரண்டு மிருகங்கள் சந்தித்துகொள்கின்றனர், அடித்துகொள்கின்றனர், வெற்றி பெறுகின்றனர், இதை தான் வழக்கம்.

இதில் என்ன புதுசு என்றால் இரண்டு மிருகங்கள் இணைந்து மற்றொரு மிருகத்தை எதிர்க்கிறது. ஆம், காங், காட்ஸில்லா மிகப்பெரும் சண்டைக்கு அப்றம் தான் உண்டு, தன் வேலையுண்டு என இருக்கிறது.

அப்போது பூமியில் மிகப்பெரும் சிக்னல் ஒன்று வர, இரண்டு மான்ஸ்டர்களும் முழித்துக்கொண்டு அந்த அழைப்பை தேடி செல்கின்றனர்.

அதை தொடர்ந்து காங் உலகிற்கு செல்ல, அங்கு ஸ்கார்கிங் ஒரு காங் படையையே அடிமையாக்கி வேலை வாங்க, காங் இதை தட்டி கேட்க, ஸ்கார்கிங் காங்-யை அடித்து தும்சம் செய்கிறது.

பிறகு என்ன காட்ஸில்லா உதவியுடன் எப்படி ஸ்கார்கிங்-யை வென்றார்கள் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல் :

இந்த மாதிரி படங்கள் என்றாலே சிஜி தான் முக்கிய பங்கு வகிக்கும், அந்த வகையில் இந்த படத்தில் சிஜி புகுந்து விளையாடியுள்ளனர். அதிலும் பல மான்ஸ்டர்களை காட்டிய விதம், சூப்பர்.

ஆனாலும், அந்த ஈவி மக்கள் இருக்கும் இடம் கொஞ்சம் ப்ரைட்நெஸ் கம்மி செய்திருக்கலாம், காங் இந்த படத்தில் மக்களோட மக்களாகவே வாழ தொடங்கிவிட்டது.

அதிலும் பல் சரிபார்த்து மாற்றுவது, கை முறிவை டாக்டர் வைத்து இரும்பு கட் போடுவது என நார்மல் மனிதன் போல் நடமாட ஆரம்பித்துவிட்டத்து. படம் முழுவதும் ஆக்‌ஷம், பிரமாண்டம் என இருந்தாலும் கதை என்று ஒன்று வேண்டுமெல்லாவா, அது துளிக்கூட இல்லை.

படம் முழுவதும் இரண்டு மான்ஸ்டர்கள் சண்டை போட்டால் போதும் என்று தான் யோசித்திருப்பார்கள் போல, அதிலும் வெற்றியும் கண்டுள்ளனர்.

கிளைமேக்ஸ் எல்லாம் குதிரை சவாரி போல் காட்ஸில்லா மேல் காங் ஏறி போகும் காட்சி எல்லாம் இந்திய சினிமாவே தோற்றுவிட்டது.

க்ளாப்ஸ்

படத்தின் சிஜி காட்சிகள்.

கிளைமேக்ஸ் பிரமாண்ட சண்டை காட்சிகள்.

பல்ப்ஸ்

பெரிய திருப்பம் இல்லாத திரைக்கதை.

மொத்ததில் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடில் குழந்தைகளை கூப்பிட்டு சென்றால் எவ்ளோ ஆச்சரியம் சந்தோஷம் இருக்குமோ, அப்படி ஒரு பயணமாக இந்த Godzilla X Kong: The New Empire இருக்கும். குடும்பத்துடன் செல்லுங்கள்.

Related Posts

Leave a Comment