இமான் அண்ணாச்சி அறிவுரையை கேட்க மறுக்கும் அபினய்

by Column Editor

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் 43 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்‌ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து நாடியா, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா என அடுத்தடுத்து வெளியேறினர். தற்போது 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த வாரம் ‘நீர்’ ஆற்றலின் வாரம் என்பதால் வருணிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பாத்ரூம் ஏரியா முழுவதும் வருண் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இதனை பயன்படுத்தி சில வேடிக்கையான டாஸ்க்குகளை வருண் கொடுத்து வருகிறார்.

மேலும் இந்த வார தலைவராக பிரியங்கா தேர்வாகியுள்ளார். இந்த வார நாமினேஷன் லிஸ்டில், ஐக்கி, அக்ஷ்ரா, நிரூப், சிபி, அபினய், இமான், தாமரை, இசைவாணி, பாவ்னி ஆகிய 9 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்காக ’உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ டாஸ்க் வழங்கப்படுவது இன்று வெளியான முதல் ப்ரோமோவில் இருந்தது. அதில், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, டீம் ஏ கண்ணாடியாக மாறி, டீம் பி-யினரை பிரதிபலிக்க வேண்டும் என பிக் பாஸ் அறிவிக்கிறார். மேலும் சிபி- அக்‌ஷராவின் கண்ணாடியாகவும், இசைவாணி – இமான் அண்ணாச்சியாகவும் மாற வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கும் நபர்களை பிக் பாஸ் ஜோடி சேர்த்துள்ளது தெளிவாக தெரிகிறது.

அதன்படி பாவ்னி – ராஜு , பிரியங்கா – தாமரை, ஐக்கி – வருண், நிரூப் – அபினய் என பிரிந்துள்ளது ப்ரோமோவில் தெரிகிறது. இதனை தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், அபினய் – நிரூப் இடையே பிரச்னை ஏற்படுகிறது. அதில் அபினய், நிரூப்பை மொட்டை அடிக்க வைக்க போகிறேன் என கூறும் காட்சிகள் உள்ளது. இந்தநிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில், இசைவாணி, பாவ்னி, அபினய் ஆகியோருடன் இமான் பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது இமான் நமக்குள் பிரச்சனை வேண்டாம், அமைதியாக இருங்கள் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு, இதைத்தான் நான் நிரூப்பிடமும் கூறினேன், இப்போது உங்களிடம் கூறுகிறேன் என அபினயிடம் கூறுகிறார். மேலும் பிரச்சனையை முடிக்க வேண்டும் என நினைத்தால் முடிக்கலாம் என்கிறார். அதற்கு அபினய் உங்கள் அட்வைசை நான் கேட்கவில்லை, நாங்கள் கூறுவதை காதுகொடுத்து கேளுங்கள் என்கிறார். இதற்கு இமான் அப்போ நான் சொல்வதை நீங்கள் கேட்கமாடீர்கள் அப்படித்தானே? என கேட்கும் காட்சிகள் உள்ளது. இதனால் இந்த டாஸ்கில் மோதல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்றைய நாமினேஷனின் போது இமான் அண்ணாச்சி மட்டம் தட்டி பேசுவதாகவும், மற்றவர்கள் கருத்தை ஏற்க மறுத்து தனது கருத்தை திணிப்பதாகவும் அவரை, அபினய் நாமினேட் செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment