வைல்டு கார்ட் என்ட்ரி மூலம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் அபிஷேக்! அவருடன் இன்னொரு நடிகருமாம்!

by Column Editor

பிக்பாஸ் சீசன் 5 கலந்துக்கொண்ட அபிஷேக் ராஜா பல சர்ச்சைகள் காரணமாக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது வாரமே வெளியேற்றப்பட்டார்.

அதன் பின்னர், ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர்கள் வெளியேற, பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் குறைய ஆரம்பித்து இருக்கிறது.ற்கனவே, டிஆர்பி பிக்பாஸ் செம்ம அடி வாங்கி கொண்டிருக்கிறது. இந்த நிலையில், வைல்டு கார்ட் என்ட்ரி மூலமாக அபிஷேக்கை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்ப திட்டம் போட்டுள்ளார்களாம்.

அபிஷேக் மீண்டும் உள்ளே நுழைந்தால் பெரிய களபரமே நடக்கும். மேலும் அவருடன் ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் விஜயின் நண்பரான நடிகர் சஞ்சீவ் நுழைய போவதாகவும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment