உங்களுக்கு பொண்ணு இருக்கு…. அண்ணாச்சி மீது வெறுப்பை கொட்டிய இசைவாணி!

by Column Editor

பிக் பாஸ் தமிழ் 5 சீசனிலேயே தற்போது கொடுக்கப்பட்டுள்ள கண்ணாடி டாஸ்க் தான் சூப்பரான ஒன்று என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கண்ணாடி டாஸ்க்கில் அபிநயின் கண்ணாடியாக நிரூப் செயல்பட்டு வருகிறார்.

அபிநய் என்னவெல்லாம் செய்கிறாரோ அதை போலவே நிரூப்பும் செய்து கொண்டு வருவது ரசிகர்களை கொஞ்சம் இரிடேட் செய்தாலும் அதன் பிறகு இருவருக்கும் இடையே வெடித்த மோதல் எபிசோடை பரபரப்பாக்கியது.

புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு கொடுப்பதற்காக நிரூப் முடி வளர்த்து வரும் விஷயம் தெரிந்தும் அபிநய் வேண்டுமென்றே தான் ஹேர் கட் செய்கிறேன் என பாத்ரூம் ஏரியாவுக்கு செல்ல வேறு வழியின்றி நிரூப்பும் தனது முடியை கொஞ்சமாக வெட்ட நிரூப்பின் ஈகோவை மொத்தமாக தட்டி எழுப்பி விட்டார் அபிநய் கண்ணாடியாக நின்று அபிநய் முன்பாக பேசிய நிரூப் தனது மனதில் தேக்கி வைத்திருந்த ஒட்டுமொத்த வெறுப்புகளையும் கொட்டித் தீர்த்து விட்டார்.

நிரூப்பின் கையை பிடித்துக் கொண்டே கடைசி வரை அதனை விடாமல் அனைத்து வசைகளையும் கேட்டுக் கொண்டு இருந்த அபிநயின் கண்கள் தானாக அழ ஆரம்பித்து விட்டன.அக்‌ஷரா மற்றும் பிரியங்கா ஓடோடி வந்து அபிநயின் அழுகையை துடைத்தனர். அடுத்ததாக இமான் அண்ணாச்சியின் கண்ணாடியாக இருந்த இசைவாணி அவர் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அண்ணாச்சி முன் நின்ற இசைவாணி, பிக்பாஸ் வீட்டு யார் பேசினாலும் பேசவிட மாட்டீங்க, ஒருத்தர் கருத்து வைக்கிறப்போ அதை கதைகொடுத்து கேட்கனும், ஆனால், நீங்க மட்டும் 3 பேர் கூட பேசுவீங்க, என்னை ஏழரை கோடி பேருக்கு தெரியும் உன்னை யாருக்கு தெரியும்னு சொன்னீங்க அப்படி பேசாதீங்க வளர்ந்து வருபவர்களை காயப்படுத்தாதீர்கள் என்றார்.

அதோடு விடுவார் என்று பார்த்தால், நல்ல வாய்ப்பு கிடைச்சி இருக்கு இதைவிடக்கூடாதுனு, மூச்சை பிடித்துக்கொண்டு இந்த வீட்டில் இருக்கும் பெரியவர் நீங்கதான், உங்களுக்கும் பொண்ணு இருக்கு யாரையும் கஷ்டப்படுத்தாதீங்க என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சொல்லிவிட்டு கடைசியா, மத்தபடி குமுதா ஹோப்பி அண்ணாச்சி என்பது போல… வேற ஒன்னும் இல்லை, அண்ணாச்சியை எனக்கு பிடிக்கும் என்றார்.

இசைவாணி பேசி அத்தனை வார்த்தைகளையும் கையைவிடாமல் பெருமையுடன் இமான் அண்ணாச்சி கேட்டுக்கொண்டார்.

Related Posts

Leave a Comment