உயிரோடு இருக்க மாட்டேன் என்று கதறும் பாரதி: ஹேமாவை பிரிக்க நினைக்கும் கண்ணம்மா

by Column Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சுவாரசியமான ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகி பார்வையாளர்களின் எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.

வில்லி வெண்பாவின் சதியால் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்துள்ள நிலையில், கடந்த வாரம் கண்ணம்மா செய்த சதியால் வெண்பா ஜெயிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது பாரதியிடம் வெண்பா கண்ணீர் விடவே உடனே பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்யும் அளவிற்கு சென்றுள்ளார்.

கண்ணம்மாவிற்கு மீண்டும் உடல்நிலை சரியில்லை என்று அவரது மகள் லட்சுமி பாரதியிடம் பரிசோதனைககு அழைத்து வந்த நிலையில், வீட்டிற்கு சென்றதும் பாரதியின் விவாகரத்து நோட்டீஸ் வந்துள்ளது.

தற்போது வெளியான ப்ரொமோ காட்சியில் பாரதி அம்மாவிடம் கண்ணம்மாவிற்கு உதவி செய்தால், தான் தற்கொலை செய்துவிடுவதாகவும், மற்றொரு புறம் கண்ணம்மா அவரது மாமியார் லெட்சுமியிடம் விவாகரத்து கொடுக்க மாட்டேன், அப்படியில்லையெனில் தனது மகள் ஹேமாவை அங்கே விட மாட்டேன் என்னிடம் அழைத்து வந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment