207
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் விஜய் மற்றும் சூர்யா, இவர்களுக்கு இருவருக்கும் பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது அனைவரும் அறிந்த விஷயம்.
மாஸ்டர் படத்திற்கு பின் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார், பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
மேலும் ஜெய் பீம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு சூர்யா தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பீஸ்ட் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களின் ஷூட்டிங் பெருங்குடியில் உள்ள சன் ஸ்டூடியோவில் நடந்துள்ளது.
அப்போது விஜய் மற்றும் சூர்யா இருவரும் சந்தித்துக்கொண்டு பேசியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் எதாவது வெளியாகுமா என இருதரப்பு ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.