207
தமிழ் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் கிங் ஷாருக் கான் நடிக்கவிருக்கும் படம் ” Lion “.
இந்த படத்தில் ஷாருக் கான் ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகி பின் படப்பிடிப்பு தாமதமானதால் படத்திலிருந்து விலகியதாக ஒரு தகவல் முன்பு வெளியாகியிருந்தது.
ஆனால் இதில் உண்மை இல்லை என்பதுபோல தற்போது படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
Lion படத்தில் ஷாருக் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும் ஷாருக்கின் காதலியாகவும் நடிக்கிறார் என்ற ருசிகர தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்த செய்தி படத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.