திரும்ப ஆரம்பிச்சிட்டாங்க… மோதிக்கொண்ட நிரூப்-அபினய்

by Column Editor

புதிய டாஸ்க்கை வைத்து விளையாடும் நிரூப் மற்றும் அபினய் சண்டை போடும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நேற்று கொடுக்கப்பட்ட பொம்மை டாக்கில் போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் இசைவாணி மற்றும் இமான் அண்ணாச்சி இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய டாஸ்க்கிலிருந்து வெளியேற்றப்பட்டார் இமான் அண்ணாச்சி. இதனால் இசைவாணி மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார் இமான் அண்ணாச்சி.

தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், அதேபோன்றொரு சண்டைக்காட்சிதான் மீண்டும் அரங்கேறியுள்ளது. அதில் ஐக்கியை கைப்பாவையாக பயன்படுத்தியது மாதிரி நான் இதை பயன்படுத்தப்போகிறேன் என்று இசைவாணி சொல்கிறார். அதற்கு மறுத்து பேசும் நிரூப், நீ அபினய்க்கு கைபாவையா என்று இசைவாணியிடம் கேட்கிறார். அப்போது இசைவாணிக்கு ஆதரவாக பேசும் அபினய், இந்த விஷயத்தையும் எல்லார்கிட்டயும் கேட்கணும் என்ற சொல்ல, அதற்கு ஒரே விஷயத்தை மட்டும் திரும்ப திரும்ப பேசாத என்று கோபமாக அபினய்யுடன் நிரூப் காரசாரமாக வாக்குவாதம் செய்கிறார்.

இதையடுத்து தொடரும் வாக்குவாதத்தில், நான் என்ன செய்தேன். உன்ன மாதிரி ஜாடையாக பேசினேன்னான என்று நிரூப் பேச, நான் என்ன ஜாடையாக பேசினேன் என்று கேள்வி எழுப்புகிறார் அபினய். நீ எதற்காக தேவையில்லாமல் இசைவாணிக்கு ஆதரவாக பேசுகிறாய் என்று அபினய்யிடம் மீண்டும் நிரூப் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. நிரூப்பின் இந்த செயல், தொடர்ந்து பார்வையாளர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

Related Posts

Leave a Comment