218
நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யூசுஃப்சாய்க்கு இங்கிலாந்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண் குழந்தைகள் கல்விக்காக போராடியதற்காக, மலாலா யூசுப்சை மீது தலிபான்கள் 2012ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தினர். தலையில் குண்டு பாய்ந்த நிலையில் அவர் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பானது. தலையில் பலத்த காயமடைந்து இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று குணமடைந்த மலாலா, தனது குடும்பத்தினருடன் அங்கேயே வசித்து வருகிறார்.
தனது 16வது வயதில் கல்வியில் பாலின சமத்துவத்தின் அவசியம் குறித்து ஐநாவில் உரையாற்றிய மலாலா, தொடர்ந்து பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காகப் பணியாற்றி வருகிறார். இதற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அசர் என்பவருடன் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹோமின் எளிமை முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.