ஆரம்பமான வலிமை கொண்டாட்டம்

by Column Editor

சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நேற்று மாலை ஒளிபரப்பட்ட அனைத்து காட்சிகளுக்கு இடையே வலிமை முதல் மோஷன் போஸ்டர் ஒளிபரப்பட்டுள்ளது.

அஜித்தின் வலிமை படம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அதிகம் எதிர்பார்ப்புகளை கொடுத்த படமாகும். இந்த படத்தின்அப்டேட்டை வெளியிட வேண்டும் என அஜித் ரசிகர்கள் பெரிய போராட்டத்தையே செய்து விட்டனர். பிரதமர் முதல் விளையாட்டு வீரர் வரை அனைவரிடமும் வலிமை அப்டேட் குறித்து கோரிக்கை விடுத்து விட்டனர் அஜித் ரசிகர்கள்.

இது குறித்து ரசிகர்களை கண்டித்திருந்தார் தல அஜித். வலிமை படபிடிப்பு முழுதும் சில மாதங்களுக்கு முன் நிறைவு செய்யப்பட்டது. இதனால் விஸ்வாசம் – பேட்ட போன்று ரஜினி படமும், அஜித் படமும் தீபாவளிக்கு மோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த படம் மட்டுமே ரிலீஸ் செய்யப்பட்டது. பின்னர் 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். ஆனால் தேதி என்னவென்று அவர் உறுதியாக்கவில்லை.

இதை தொடர்ந்து தல பொங்கல் என சொல்லி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதற்கிடையே இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பைக் டிரிப் சென்று விட்டு, தீபாவளிக்கு தான் அஜித் திரும்பி வந்தார். இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்களை ரசிகர்கள் வைரலாக்கினர்.

சட்டவிரோதமாக பைக் ரேஸில் ஈடுபடும் கேங்கை வளைத்து பிடிக்கும் போலீஸ் அதிகாரியாக தான் வலிமை படத்தில் அஜித் நடித்துள்ளார் என ஏற்கனவே கூறப்பட்டு விட்டது.

இதற்கிடையே வலிமை படத்திலிருந்து முதல் சிங்கிளாக “நாங்க வேற மாறி ” சாங் ரிலீஸ் ஆகி மாஸ் ஹிட்டடித்தது. இந்த பாடலை தல ரசிகர்கள் வெறித்தனமாக ட்ரெண்டாக்கி வந்தனர். பின்னர் படத்திலிருந்து செகண்ட் சிங்கிளாக அம்மா சாங் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தயாரிப்பாளர் கூற்றுப்படி வலிமை வரும் ஜனவரியில் ரிலீஸாக இருப்பதால் இந்த மாதம் முழுவதும் வலிமை கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை விற்றுள்ளது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

அதன்படி சென்னை – ரோமியோ பிக்சர்ஸ், செங்கல்பட்டு – ஸ்கைமேன் தயாரிப்பு, கோயம்புத்தூர் – SSIP தயாரிப்பு, மதுரை – கோபுரம் பிலிம்ஸ், திருச்சி – ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ், சேலம் – ஸ்ரீ குமரன் பிலிம்ஸ், உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் நேற்று மாலை ஒளிபரப்பட்ட அனைத்து காட்சிகளுக்கு இடையே வலிமை முதல் மோஷன் போஸ்டர் ஒளிபரப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment