ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்: பிரித்தானியா எச்சரிக்கை!

by Column Editor

ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் கடுமையான பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் எச்சரித்துள்ளார்.

இந்த வார இறுதியில் லிவர்பூலில் ஜி7 வெளியுறவு அமைச்சர்களை சந்திப்பது ஒற்றுமையைக் காட்டுவதாகவும், அத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலோபாயத் தவறு என்பதை தெளிவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.

பிரித்தானியாவும் அதன் நட்பு நாடுகளும் அந்த நடவடிக்கையை எடுப்பதில் இருந்து ரஷ்யாவைத் தடுக்க வேண்டும் என ட்ரஸ் தெரிவித்தார்.

உக்ரைனின் எல்லையில் மாஸ்கோ துருப்புக்களை குவிப்பதால் பதற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் கிரெம்ளின் படையெடுப்பதற்கான திட்டத்தை மறுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் முந்தைய எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்திய ட்ரஸ், ஜி7 ‘உக்ரைனைப் பொறுத்தவரை ஆக்கிரமிப்புக்கு எதிரான நமது நிலைப்பாட்டில் முற்றிலும் வலுவாக இருக்கும்’ என கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘ரஷ்யா அந்த நடவடிக்கையை எடுத்தால், அது ஒரு மூலோபாய தவறாக இருக்கும், மேலும் ரஷ்யாவிற்கு கடுமையான விளைவுகள் இருக்கும்’ என தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment