கெட்ட வார்த்தைகள்.. அசிங்கமான சண்டை! படுமோசமாக செல்கிறதா பிக்பாஸ்?

by Column Editor

என்ன தான் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
மில்லியன்கணக்கான மக்கள் பார்வையிடும் இந்நிகழ்ச்சியின் இந்த சீசனில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
பெரும்பாலும் மக்களுக்கு பரிட்சயம் இல்லாத முகங்களை களமிறக்கி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது பிக்பாஸ்.
நேற்றைய லக்ஸரி பட்ஜெட் டாஸ்கின் போது, சிபி பேசிய கெட்டவார்த்தையால் டென்ஷன் ஆனார் ஆக்ஷரா.
வருண்- நிரூப்புக்கு இடையே நடந்த சண்டையிலும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது, என்னடா இது என மக்களே கேட்கும் அளவுக்கு அடிமட்டத்துக்கு செல்கிறதா பிக்பாஸ் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நேற்றைய டாஸ்கின் முழு விபரம்,
இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக நீயும் பொம்மை நானும் பொம்மை தெரியும் உண்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் முதல் முறையாக ஹவுஸ்மேட்ஸ் மற்ற ஹவுஸ்மேட்ஸுக்காக விளையாடினார்கள். இதில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோற்க வேண்டும் என போட்டியாளர்களே முடிவு செய்து கொள்வதாக இருந்தது.
யார் ஒருவர் கடைசியாக கூடாரத்துக்குள் நுழைவாரோ, அவர் கையில் வைத்திருக்கும் பெயர் கொண்ட போட்டியாளர் டாஸ்கில் இருந்து வெளியேற்றப்படுவார்.
முதன்முறையாக ஒலி ஒலித்ததும், தாமரை கடைசியாக வர பிரியங்கா வெளியேற்றப்பட்டார், இதற்கு நிரூப் தான் காரணம் என தாமரை சண்டையிட்டார்.
தொடர்ந்து அடுத்த ஒலி எலிப்பிய போது, வருணையும் அக்ஷராவையும் விளையாட விடாமல் பிடித்துக் கொண்டார் நிரூப்.
இதனால் நீ இப்படி பிடிப்பது தவறு என அக்ஷரா நிரூப்பிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது சம்பந்தமே இல்லாமல் கூடாரத்திற்குள் வந்த சிபி, பால் கறக்கும் டாஸ்க்கின் போது சம்பவத்தை சுட்டிக்காட்டி நிரூப் செய்தது சரிதான் என அக்ஷராவிடம் வாக்குவாதம் செய்தார்.
அப்போது கெட்ட வார்த்தையையும் பயன்படுத்தினார் சிபி. இதனால் கடுப்பான அக்ஷரா, யாருக்கிட்ட என்ன பேசுற? என்ன வார்த்தை பேசுற? அறிவில்லையா என கேட்டு கத்தினார்.
இதற்கு முன்னதாக நிரூப்- வருணுக்கும் நடந்த சண்டையிலும் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டது, ஒருவரையொருவர் மிக ஆக்ரோஷமாக திட்டிக் கொண்டனர், அவர்களை சமாதானப்படுத்தினார் பிரியங்கா.கடந்த வாரம் நடந்த டாஸ்கின் போதும், தாமரை- பாவனி இடையே பிரச்சனை எழ, ஒருவரையொருவர் அடிக்க கை ஓங்கினர்.

ஒரு டாஸ்கில் ஏன் இவ்வளவு சண்டை? இவ்வளவு தரம்தாழ்ந்து செல்ல வேண்டுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment