புதிய காதலனால் முதல் காதலனை கழட்டிவிட்ட பிக் பாஸ் ஜூலி..

by Lifestyle Editor

பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி, அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். புகாரில் மனிஷ் என்பவர் தன்னை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி, தன்னிடம் பணம் மற்றும் தங்க நகைகளை ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். அழகு நிலையத்துக்கு சென்ற போது மேனேஜர் மனிஷுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக நெருக்கமாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக மனிஷ் தனது நம்பிக்கை கொடுத்ததால், மனிஷுக்கு இருசக்கர வாகனம், 2 சவரன் தங்க செயின், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து ரூ. 2.50 லட்சம் வரை செலவு செய்ததாக ஜூலி புகாரில் தெரிவித்திருந்தார். இதன்பின், மனிஷிடம் நடந்த விசாரணையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலிக்கும் அவரது முன்னாள் காதலருக்கும் பிரச்சனை எழுந்தபோது, மனிஷ் என்பவர் ஜூலிக்கு ஆறுதல் கூற பின்னர் ஜூலிக்கும் மனிஷூக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் ஜூலி வேறொரு நபருடன் நட்பாக பழக, மனீஷ் உடன் இருந்த காதலை துண்டித்து அவருடன் பேசுவதையே தவிர்த்து வந்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜூலியின் இந்த திடீர் மாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாத மனிஷ், ஜூலிக்கு கால் செய்து நீ இல்லாமல் என்னால் வாழ இயலாது, என கூறி அழுது, அடிக்கடி கால் செய்து வந்துள்ளராம்.

இதனால் மனிஷை மிரட்டுவதற்காக ஜூலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. தனையடுத்து மனிஷ் தாமாகவே முன்வந்து ஜூலி வாங்கி கொடுத்த தங்க நகை, ஃபிரிட்ஜ் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் முன்னிலையில் திருப்பியளித்துள்ளார். காதலர் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக ஜூலி கொடுத்த இந்த புகாரில், ஜூலியே காதலை துண்டித்ததுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்தது அதிர்ச்சியளித்துள்ளது. ”

Related Posts

Leave a Comment