இழந்த பார்வையை திரும்ப தரும் பயோனிக் கண்கள்

by Editor News

இழந்த பார்வையை மீண்டும் கொண்டுவர முடியும் என்பதை கண்டறிந்து உள்ளனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் -நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பயோனிக் என்கிற செயற்கை கண்களைக் கொண்டு இழந்த பார்வையை மீண்டும் பெற முடியும் என்பது ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த இரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை செய்து வந்தனர். இவர்கள் வடிவமைத்த பயோனிக் கண்ணைப் போன்று பயோனிக் 99 என்று அழைக்கப்படுகிறது.

பார்வை இல்லாதவர்கள், தீவிர பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த செயற்கைக்கண்ணை கொண்டு இழந்த பார்வையை கொண்டுவர முடியும் என்று உறுதியாகச் சொல்கிறார்கள். இந்த பயோனிக் கண், பார்வை இல்லாதவர்களுக்கு பொருத்தி அவர்களை சோதனை செய்கின்ற முயற்சி நடக்கிறது.

இந்த பயோனிக் கண் சாதனத்தைக் கொண்டு மூளையை தூண்டி இருக்கும் பொருட்களை கண்டறிய முடியும் என்கிறார்கள். இதனைச் சுற்றியுள்ள திசுக்கள் இலிருந்து எதிர்பாராத எதிர்வினைகள் எதுவும் வரவில்லை. இது பல ஆண்டுகளாக பாதுகாப்பாக இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர் .

இந்த கண்ணின் ரெட்டினா பகுதி ஒளியை உள்வாங்கிக் கொண்டு அவற்றை மூளைக்கு எலக்ட்ரிக்கல் சிக்னலாக அனுப்பும். இந்த பீனிக்ஸ் 99 சாதனமும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ள நியூரான்களுக்கு நேரடியாக கேமராவிலிருந்து மீன் துண்டுகளை அனுப்புவதன் மூலம் மூளையை தூண்ட செய்கிறது என்கிறார்கள்.

இந்த பயோனிக் கண்கள் இன்னும் பரிசோதனை முயற்சியில் இருப்பதால் மக்களுக்கு பொருத்தவதற்கு இன்னும் சில காலம் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். இந்த அதிசய தொழில்நுட்பமானது மிக முக்கியமானது என்றும், மருத்துவத் துறையில் மிக முக்கியமான மைல்கல்லாக போற்றப்படும் என்று ஆசிரியரின் சிட்னி பல்கலைக்கழகத்தில் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் கிரெக் சுவானிங் தெரிவித்திருக்கிறார்.

Related Posts

Leave a Comment