இஸ்ரேல் போரால் மறந்து போன ரஷ்ய-உக்ரைன் போர்: உக்ரைனை வஞ்சிக்கும் இயற்கை

by Column Editor

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போர் 3 ஆவது ஆண்டை எட்ட உள்ளது. சுமார் 21 மாதங்களுக்கு மேலாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இதனால் உக்ரைனின் கீவ் உள்ளிட்ட நகரங்கள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், மத்திய மற்றும் தெற்கு உக்ரைனில் பனிப் புயல் தாக்கியதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அண்டை நாடானா மால்டோவாவில் 3 பேர் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பலத்த வேகத்துடன் பனிக்காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. இதனால் நூற்றுக்கணக்கான ஊர்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் மின் இணைப்பை இழந்துள்ளன. மத்திய கீவ், தெற்கு ஒடேசா ஆகியவை கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

முன்னே செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிக்காற்று வீசுவதால், விபத்துக்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பனியுடன் சேர்ந்து அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், நிலைமை இன்னும் மோசமாகக்கூடும் என்று அஞ்சப்படுக்கிறது.

Related Posts

Leave a Comment