முதன்முறையாக கூறிய நமீதா – பிக்பாஸில் தாமரைக்கு தனக்கும் என்ன பிரச்சனை, வெளியேறியது ஏன்?

by Column Editor

பிக்பாஸ் 5வது சீசன் போட்டியாளர்களில் ஒரு ஸ்பெஷல் விஷயம் நடந்தது. அது என்னவென்றால் முதன்முறையாக இந்த சீசனில் திருநங்கை போட்டியாளராக வந்தார்.
நமீதா மாரிமுத்து பிக்பாஸில் வந்தது அனைவருக்கும் சந்தோஷம் தான். அவரும் நிகழ்ச்சியில் மிகவும் ஈடுபாடுடன் இருந்து வந்தார்.
எல்லோரும் போல் அவர் தனது வாழ்க்கை பயணத்தை கூற ஒட்டுமொத்த தமிழக மக்களும் கண்ணீர்விட்டு அழுதார்கள்.
பின் திடீரென அவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், தாமரையுடன் பெரிய சண்டை என்றும் கூறப்பட்டது.
அண்மையில் நமீதா இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்போது பிக்பாஸ் செல்வீர்களா மீண்டும் என கேட்டதற்கு, போகலாம், போகாமலும் இருக்கலாம் என்றார்.
தாமரையுடன் சண்டையா என்ற கேள்விக்கு அவர், அவர் ஒரு நல்ல பெண் தான், சில விஷயங்கள் தெரியவில்லை. எங்களுக்கு எந்த சண்டையும் இல்லை, அவர் வெளியே வந்தால் எங்களது குடும்ப நிகழ்ச்சிகளில் அவரை பாட வைக்க முடிவு செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave a Comment