நிரூப் செய்த மோசமான காரியம் – டாஸ்கில் ஏற்பட்ட விபரீதத்தால் கீழே விழுந்த போட்டியாளர்

by Column Editor

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களுக்கு இன்று வினோத டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் மற்றவர்களை ஜெயிக்க வைப்பதை என்பதை மையமாக வைத்து விளையாடுகின்றனர்.
கடந்த சில தினங்களாகவே நிரூப், பிரியங்கா இடையே சரியான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இணைபிரியாத நண்பர்களாக இருந்த இவர்கள் தற்போது சண்டையிட்டுக்கொள்வது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றது.
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் போட்டியாளர்கள் அவரவர் பெயர்களில் உள்ள பொம்மைகளை எடுத்து வராமல் மற்ற போட்டியாளர்களின் பொமமையை எடுத்துவர வேண்டும்.
இதில் முதல் ஆளாக ஓடிய தாமரை பிரியங்கா பொம்மையை எடுத்துக்கொண்டு, கூடாரத்திற்கு நுழைய முற்பட்ட நிலையில், நிரூப் செய்த சதியினால் அவர் கடையில் தான் கூடாரத்திற்கு வந்துள்ளார். அவரது கையில் பிரியங்கா பெயர் போட்ட பொம்மை வைத்திருந்த நிலையில், பிரியங்காவை டாஸ்கில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.
போட்டியாளர்கள் முண்டியடித்து கூடாரத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில், ஆண் போட்டியாளர் ஒருவர் கீழே தடுமாறி விழுந்துள்ளதையும் இக்காட்சியில் காட்டப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment