பிக்பாஸ் அல்டிமேட்டின் இந்த வார தலைவர் ‌‌‌யார் ?.. கடுமையான டாஸ்க்கில் விளையாடும் போட்டியாளர்கள் !

by Column Editor

பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்கும் புதிய கொடுக்கப்பட்டுள்ளது.

ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது களைகட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். தற்போது நிகழ்ச்சியை சுவாரஸ்சியமாக்க புதிய டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினத்தில் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் இந்த வார‌ தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டாஸ்க்கின் பெயர் தூக்குத்துரை என்பதை சினேகன் வாசிக்கிறார். பிக்பாஸ் அல்டிமேட்டின் அடுத்த வார தலைவர் சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பாலாஜி முருகதாஸ் ஆகியோருக்கு நடத்தப்படும் இறுதிக்கட்ட போட்டி நடத்தப்படுகிறது. இந்த இறுதிக்கட்ட போட்டிக்காக போட்டியாளர்கள் இரு அணிகளாக வேண்டும்.

பின்னர் இரு அணிகளும் அவரவர்களை ஆதரிக்கும் போட்டியாளர்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியை தரையில் படாதபடி தூக்கி பிடிக்க வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கின்படி இரு அணி போட்டியாளர்களும் விளையாடுகின்றனர். இதில் யார் இந்த வார பிக்பாஸ் அல்டிமேட் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று இன்று இரவு முழு எபிசோடில் தெரியும்.

Related Posts

Leave a Comment