உண்மையை கண்முன் அறிந்த ராதிகா! மனைவியுடன் கோபி செய்த ரொமான்ஸ்

by Column Editor

பாக்கியலட்சுமி சீரியலில் கோபி யார் என்ற உண்மையை தெரிந்துக்கொண்ட ராதிகா, கோபியின் பொய்களை நினைத்து கண் கலங்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இல்லத்தரசிகளின் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட இந்த சீரியல் குடும்ப பெண்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது.
சீரியலில் திருமணமான கோபி, மனைவி பாக்கியாவுக்கு தெரியாமல் தனது தோழி ராதிகாவைச் சந்தித்து வருகிறார். இதனிடையே பாக்கியாவும் ராதிகாவும் தோழிகள் ஆகிறார்கள். ஆனால் இருவரையும் இவ்வளவு நாள் ஒன்றாக சந்திப்பதை தவிர்த்து வந்த கோபி, தற்போது ராதிகாவிடம் மாட்டிக் கொண்டுள்ளார்.

விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய ப்ரோமோவில், ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பாக்கியாவுடன் வருகிறார் கோபி. சிறிது நேரம் கழித்து அதே நிகழ்ச்சிக்கு வருகிறார் ராதிகா. கோபி அங்கு பாக்கியாவுக்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். பாக்கியாவும் கோபியும் ஒன்றாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகும் ராதிகா, அழுதவாறே அங்கிருந்து கிளம்புகிறார். இதுவரை கோபி சொல்லி வந்த பொய்களை நினைத்து புலம்பும் ராதிகா, எல்லாமே பொய் என அழுகிறார். இவ்வாறு புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment