உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.! அரையிறுதிக்குள் நுழைய இந்திய அணிக்கு இருக்கும் வாய்ப்பு இதுதான்.!

by Column Editor

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவின் அபரா வெற்றிக்குப் பிறகு இந்திய அணி அரையிறுக்கு தகுதி பெறும் வாய்ப்பு சற்று எளிதாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதி சுற்றுக்கு குரூப் 1ல் இங்கிலாந்து அணியும், குரூப் 2வில் பாகிஸ்தான் அணியும் தகுதிப்பெற்றுள்ளன. குரூப் 1ல் இன்று அபுதாபியில் நடக்கவிருக்கும் ஆஸ்திலேியா-வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா போட்டிகளின் முடிவை பொறுத்து ஆஸ்திரேலிய அல்லது தென் ஆப்பரிக்கா இந்த இரு அணிகளில் எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது தெரியவரும்.

அதேபோல், குரூப் 2-வில் அரையிறுதிக்கு தகுதிப்பெற நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது. தற்போது குரூப் 2 பிரிவின் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி 6 புள்ளிகள் மற்றும் +1.277 நெட் ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்திய 4 புள்ளிகளுடன் +1.619 நெட் ரன் ரேட்டுடன் 3வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் +1.481 நெட் ரன் ரேட்டுடன் 4வது இடத்திலும் உள்ளன. குரூப் 2வில் நாளை நடக்கவிருக்கும் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் போட்டி மிகவும் முக்கியமானது. நாளை நடக்கும் போட்டியின் முடிவை பொறுத்தே ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கான அரையிறுதி வாய்ப்புகள் உறுதியாகும்.

நாளை நக்கவிருக்கும் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றால் 8 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெறும், இந்தியா, ஆப்கானிஸ்தான் டி20 உலகக் கோப்யை தொடரிலிருந்து வெளியேறும். ஒருவேளை நியூசிலாந்து தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தான் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்.

அதேபோல் திங்கட்கிழமை நடக்கவிருக்கும் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், 6 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் 2வது இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை நமீபியாவிடம் இந்தியா தோல்வியடைந்தால் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

Related Posts

Leave a Comment