வாவ்.. காதலர் நெஞ்சில் சாய்ந்தபடி நயன்தாரா!

by Column Editor

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர்கள் கடந்த 6 ஆண்டுகளாக ரொமான்டிக் ஜோடியாக வலம் வருகின்றனர்.

இந்நிலையில் இருவரும் ஒன்றாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, நெருக்கமாக புகைப்படங்களை வெளியிடுவது, பண்டிகைகளை கொண்டாடுவது என பிஸியாக உள்ளனர். மேலும் இருவரும் தற்போது தீபாவளி பண்டிகையை ஒன்றாக கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் வான வேடிக்கை பின்னால் தெரிய, நயன்தாரா விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி செம்ம கியூட்டாக ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன், மகிழ்ச்சியாக இருப்பது ஒரு பயிற்சி! தயவுசெய்து தினமும் அதை பயிற்சி செய்யுங்கள். கவலைகள் அனைத்தும் பட்டாசுகள் போல வெடிக்கப்பட வேண்டும். எதுவாக இருந்தாலும் நமது இலக்குகளை நோக்கி விடாமுயற்சியுடன் இருங்கள். மகிழ்ச்சியாக இருக்க மறக்காதீர்கள்! வாழ்க்கையில் கொண்டாடுவதற்கும் மகிழ்ச்சி அடைவதற்கும் நிறைய இருக்கிறது என கூறி தீபாவளி வாழ்த்து கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Related Posts

Leave a Comment