இனிமேல் திரைப்படங்கள் இயக்க மாட்டேன்… அல்போன்ஸ் புத்திரன்

by Lifestyle Editor

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இனிமேல் திரைப்படங்கள் இயக்க மாட்டேன் என தனவே சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நிவின் பாலி நடித்த நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன்/ இந்த படம் தமிழகத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு பிரேமம் என்ற படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் அகில இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்தின் மூலம்தான் சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா ஆகியோர் பிரபலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அவியல் மற்றும் நயன்தாரா நடித்த கோல்டு ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தற்போது கிப்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் தனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதால் திரையரங்குகளுக்கான படங்கள் இயக்குவதை நிறுத்திக் கொள்வதாக உருகமாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.

நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் பாடல் வீடியோக்கள், குறும்படங்கள், ஏதேனும் வெப் தொடர்கள் இயக்க முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

Related Posts

Leave a Comment