அஜித்- விக்னேஷ் சிவன்- அனிருத்… ‘அஜித் 62’ படத்தின் அதிரடி கூட்டணி!…..

by Column Editor

அஜித்தின் 62 வது படம் குறித்த புதிய தகவல்கள் கிடைத்துள்ளது.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான வலிமை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை அடுத்து மூன்றாவது முறையும் எச், வினோத் உடன் அஜித் கூட்டணி அமைக்கிறார். அந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அஜித்தின் 62 வது படமாக உருவாகும் இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு தீபாவளியை படக்குழுவினர் டார்கெட் செய்வதாகும் கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றுமொரு அதிரடி காம்போவிற்காக காத்திருப்போம்!

Related Posts

Leave a Comment