செஸ்: உலகின் நம்பர் 3 சீன வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா…

by Column Editor

சாரிட்டி கோப்பை செஸ் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. சாரிட்டி கோப்பை விரைவு செஸ் போட்டித் தொடர் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இதில் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் விதித் சந்தோஷ், பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா உட்பட 16 பேர் பங்கேற்றுள்ளனர்.

சாரிட்டி கோப்பை செஸ் போட்டியில் சீன வீரர் டிங் லிரேனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. சாரிட்டி கோப்பை விரைவு செஸ் போட்டித் தொடர் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. இதில் நார்வேயின் கார்ல்சன், இந்தியாவின் விதித் சந்தோஷ், பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா உட்பட 16 பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டித் தொடரின் 8வது சுற்றில் தமிழகத்தின் இளம் செஸ் நட்சத்திரம், 16 வயது பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 3 சீன வீரர் டிங் லிரேன் விளையாடினர். இந்த ஆட்டத்தில் நம்பர் 3 சீன வீரர் டிங் லிரேன் வெள்ளைக்காய்களுடன் ஆட, பிரக்ஞானந்தா கருப்புக் காய்களுடன் ஆடினார். இதில் 49வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

சமீபத்தில்தான் பிரக்ஞானந்தா உலக சாம்பியன், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார் பிரக்ஞானந்தா.

பிரக்ஞானந்தா வெற்றி பெற மற்றொரு இந்திய வீரர் விதித், வியட்நாம் வீரர் குவாங் லியாம் லீயிடம் வீழ்ந்தார். மற்றொரு இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா ஸ்பெயினின் டேவிட் ஆண்டன் மோதிய போட்டி ட்ரா ஆனது.

8 சுற்றுக்களின் முடிவில் 3 வெற்றி, 3 ட்ரா, 2 தோல்வி என்று பிரக்ஞானந்தா 5வது இடத்தில் உள்ளார். முதல் நான்கு இடங்களில் 7 புள்ளிகளுடன் குவாங் லியாம் லீ, போலந்தின் ஜான் கிறிஸ்டோப் 6 புள்ளிகளுடனும், கார்ல்சன் மற்றும் அமெரிக்காவின் ஹான்ஸ் மோக் நீமென் உள்ளனர்.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ல் பிறந்தார். தற்போது அவர், தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு கணினி அறிவியல் பயின்று வருகிறார். பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தாய் நாகலெட்சுமி. பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி.

Related Posts

Leave a Comment