275 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சுருட்டிய ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி!

by Column Editor

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி அடிலெட்டில் நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்து, அதிகப்பட்சமாக லாபஸ்சேன் சதமடித்து 103 ரன்னிலும், வார்னர் 95 ரன்னிலும், ஸ்டீவன் ஸ்மித் 93 ரன்னிலும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 51 ரன்னிலும் அவுட்டாகி டிக்ளேர் செய்தது,.

அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு, டேவிட் மலான் 80 ரன்னிலும், ஜோ ரூட் 62 ரன்னிலும் அவுட்டாகினர். பென் ஸ்டோக்ஸ் 34 ரன்னும், கிறிஸ் வோக்ஸ் 24 ரன்னும் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டும், லயான் 3 விக்கெட்டும், கிரீன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் இரண்டாவது இன்னிங்கில் களம்கண்ட ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இதனால் இங்கிலாந்து அணி 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்க முன்னணி வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 34, ஹமீத் ரன் எடுக்காமலும், டேவிட் மலான் 20 ரன்னுடனும், ஜோ ரூட் 24 ரன்னிலும் அவுட்டாகினர். 82 ரன்கள் எடுப்பதற்குள் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இறுதியில், 192 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆக ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. அதிகப்பட்சமாக ரிச்சர்ட்சன் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

Related Posts

Leave a Comment