பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் மூர்த்தி இந்த இயக்குனரின் உறவினரா?

by Column Editor

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன்-தம்பிகள் என்றால் அந்த குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி வருகிறது.

இந்த தொடரில் அவ்வப்போது சில பிரச்சனைகள், சர்ச்சை, அழுகை, சந்தோஷம் என எல்லாம் கலந்த கலவையாக ஒரு சாதாரண குடும்பம் எப்படியெல்லாம் இருக்குமோ அப்படி காட்டுகிறார்கள்.

தொடரில் அண்ணனாக நடித்து அசத்தி வருபவர் மூர்த்தி என்கிற ஸ்டாலின். இவரைப்பற்றி ரசிகர்களுக்கு தெரியாத ஒரு உண்மை செய்தி சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

அது என்னவென்றால் ஸ்டாலின் தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்களின் சகோதரர் மகனாம்.

ஸ்டாலின் பாரதிராஜா இயக்கிய தெற்கத்தி பொண்ணு என்ற தொடர் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

Related Posts

Leave a Comment