பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி..

by Editor News

பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி தொடர்.

ஓரு குடும்ப தலைவியின் கதை என்ற அடைமொழியோடு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இப்போது கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தே காணப்படுகிறது.

டிஆர்பியில் இந்த சீரியல் இப்போதெல்லாம் பெரிய அளவில் சதவீதம் பெறவில்லை. இருந்தாலும் தொடருக்கு பெண்கள் மத்தியில் நல்ல பேச்சு தான் உள்ளது.

இப்போது கதையில் கோபி தனது அம்மாவை வீட்டிற்கு அழைத்து சென்று சரியாக கவனிக்காததால் அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியின் ஹிட் தொடர்கள் ஸ்பெஷலாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

அப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தொகுப்பாக மதியம் 3 மணிக்கு தொடங்கப்பட்டு 2 மணி நேரம் பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

Related Posts

Leave a Comment