படு பிரம்மாண்டமாக நடந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ்- விருதுகளை தட்டிச் சென்றவர் யார் யார்?

by Editor News

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.

முன்னணி தொலைக்காட்சிகள் அளவிற்கு பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது முன்னேறி வருகிறார்கள்.

இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமின்றி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களும் பெரிய அளவில் மக்களை கவர்ந்து வருகிறது.

தற்போது ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் என்ற பெயரில் விருது விழா நடந்து முடிந்துள்ளது.

ந்த விருது விழாவில் நிறைய தலைப்புகளில் விருதுகள் வழக்கப்பட்டுள்ளது.

இதில் கார்த்திகை தீபம் சீரியல் நாயகன் கார்த்தி, நினைத்தேன் வந்தாய் தொடருக்காக கணேஷ் வெங்கட்ராமன், தமிழா தமிழா ஷோ தொகுப்பாளர் ஆவுடையப்பன் போன்றவர்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

மே 1ம் தேதி மதியம் 1 மணிக்கு இந்த விருது விழாவின் முதல் பாகம் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

Related Posts

Leave a Comment