லண்டனின் இடம்பெற்ற கத்திக் குத்துத் தாக்குதலில் ஐவர் காயம்!

by Editor News

வடக்கு லண்டனின் ஹைனோல்ட் (Hainault) சுரங்க ரயில் நிலையம் அருகே கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கூரிய ஆயுதம் ஏந்தியதாகக் கூறப்படும் ஒரு நபர், வீடொன்றின் மீது வாகனத்தை மோதவிட்டு பலரைக் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பொலிஸார் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உட்பட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

இன்று (30.04.24) உள்ளூர் நேரப்படி காலை 7 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் தாக்குதல் நடத்திய 36 வயதுடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் எனவும், இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாக்குதலில் காயமடைந்த பொலிசார் உள்ட்ட ஐவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment