ஸ்கூலுக்கு 1 கோடி பணம் நான் தரேன்… ஆனா ஒரு கண்டிஷன்? டீலிங் பேசும் கனி அப்பா

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தர பாண்டி ஸ்கூலை வாங்க பிளான் போட்டு ஸ்கூல் ஓனரிடமும் தந்திரமாக பேசி அவரை சம்மதிக்க வைத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது முத்துப்பாண்டி ரத்னாவிடம் தப்பாக பேசியது தெரியவர சண்முகம் அரிவாளை எடுத்துக்கொண்டு கிளம்ப, பரணி அவளை தடுத்து நிறுத்துகிறாள்.

ஏழையா பிறந்த நமக்கு கனவு இருக்கக் கூடாது, இந்த ஸ்கூல் நமக்கு வேண்டாம் என்று சொல்கிறாள். சண்முகம் தங்கைகளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, சௌந்தரபாண்டி இந்த ஸ்கூலை இடித்து சரக்கு அடிக்கிற இடமா மாத்த பிளான் போட்டு இருக்கான் என்று சொல்கிறான். அதுக்கு நாம விடக்கூடாது என்று சொல்லி கோவிலுக்கு கிளம்பி வருகிறான். கோவிலில் உங்களிடம் கையேந்தி அந்த ஸ்கூலை வாங்குறதுக்கு நீ தான் எப்படியாவது உதவி செய்யனும் என்று வேண்டுகிறான். அப்போது இங்கு வந்த சாமியார் அடுத்த வாரம் திருவிழா வருது, ஊர் காரர்களை உண்டியலில் காசு போட சொல்லுப்பா என்று சொல்கிறார்.

சாமியார் என்னுடைய சாப்பாட்டுக்கு போக மீதி பணத்தை உண்டியலில் போடப் போறேன். கோவிலுக்கு தானே பயன்பட போகுது என்று சொல்ல, சண்முகத்துக்குள் ஏதோ ஒரு யோசனை தோன்றுகிறது. சண்முகத்தின் பணத்தேவையை அறிந்த கனியின் அப்பா வேலு, வீட்டுக்கு வந்து வைகுண்டம் மற்றும் பரணியிடம் சண்முகத்துக்கு தேவையான பணத்தை நான் தருகிறேன் என் பொண்ணு கனியை என்கிட்ட கொடுத்துடுங்க என்று பேசுகிறார். அடுத்ததாக சண்முகம் கனி ஆகியோர் கோவிலில் இருந்து வந்து கொண்டிருக்கும் போது ஒருவர் பழனிக்கு பாதயாத்திரை போறேன் உங்களால முடிஞ்ச உதவி செய்யுங்க என்று கேட்க, கனி நீங்க கோவிலுக்கு போக நாங்கள் எதுக்கு உதவனும் என்று கேள்வி கேட்கிறாள்.

அப்படியெல்லாம் பேசக்கூடாது என்று சொல்லும் சண்முகம் பணத்தை எடுத்துக் கொடுத்து அவரை அனுப்பி வைக்கிறான். பிறகு கனியுடன் கடவுளை பார்க்க வரேனு வேண்டி இருக்கிறவர் தன்னால் வர முடியாத போது மற்றவர்களிடம் உதவி கேட்டு கடவுளை பார்க்க போறது தப்பு இல்லை என்று சொல்கிறான். அதே சமயம் ஸ்கூல வாங்க தன்னிடம் பணம் இல்லாத நிலையில் மக்களிடம் உதவி கேட்கலாம் என்ற எண்ணமும் அவனுக்குள் தோன்றுகிறது. இதைத் தொடர்ந்து வீட்டுக்கு வர, கனியின் அப்பா வேலு மாணிக்கம் அங்கு இருக்க சண்முகத்துக்கும் அவருக்கும் பெரிய வாக்குவாதம் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment