ஒரே வருடத்தில் முடிவுக்கு வரும் ஜீ தமிழின் முக்கிய சீரியல்!

by Lifestyle Editor

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் ‘சண்டக்கோழி’ என்கிற புத்தம் புதிய சீரியல் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் இந்த தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த ஆண்டு மே 8-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சண்டக்கோழி. இந்த சீரியலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி 2’ தொடரில் ஹீரோயினாக நடித்து வந்த ஆலியா மானசா வெளியேறிய பின்னர், அவருக்கு பதில் நடித்து வந்த ரியா விஸ்வநாதன் கதாநாயகியாக நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள், மந்திரப்புன்னகை, போன்ற சீரியலில் நடிப்பு பிரபலமான நியாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இருந்தே எதற்கெடுத்தாலும் முட்டிக் கொள்ளும் இருவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த இருவரும் தங்களுடைய திருமண வாழக்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும், தங்களின் பிரச்னையை கை விட்டுவிட்டு, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலில் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே இந்த சீரியலின் கதைக்களம்.

விறுவிறுப்பான கதைக்களத்தில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தாலும், குறைந்த அளவிலான ரசிகர்களை மட்டுமே இந்த தொடர் கவர்ந்தது. அதே போல் TRP ரேட்டிங்கிலும் மிகவும் பின் தங்கி இருக்கும் காரணத்தால், இந்த சீரியலை ஒரே வருடத்தில் முடிவுக்கு கொண்டு வர ஜீ தமிழ் தரப்பு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் ரியா விஸ்வநாதனின் ரசிகர்கள் மற்றும் இந்த தொடரை விரும்பி பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சீரியலின் ஹீரோ நியாஸ் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய தொடரில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment