ஸ்கூலை வாங்க 1 கோடிக்கு நடந்த டீலிங்.. பணத்துக்காக ஷண்முகம் எடுத்த ரிஸ்க்

by Lifestyle Editor

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் என் தங்கச்சியை ஸ்கூல் ப்ரின்சிபலா மாற்றி காட்டுறேன் என்று சவால் விட்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஷண்முகம் விட்ட சவாலை கேட்டு சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைய, பரணி நான் என் புருஷனோட சேர்ந்து வாழனும்னு ஆசையா இருந்தேன், பஞ்சாயத்தை கூட்டி அதை நீங்க நடத்தி வச்சிடீங்க ரொம்ப நன்றி என்று சொல்லி தனது பங்குக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள்.

இதனை தொடர்ந்து வீட்டிற்கு வரும் ஷண்முகம் வைகுண்டத்திடம் ஸ்கூலை எடுத்து நடத்த போகும் விஷயத்தை சொல்ல, அவர் அது எப்படி டா முடியும். 1 கோடி ரூபாய்க்கு மேல சொல்லுவாங்களே என்று சொல்ல, அது எத்தனை கோடியா இருந்தாலும் சரி என் தங்கச்சிக்காக நான் செய்ய தான் போறேன் என்று சொல்கிறான்.

அதன் பிறகு சண்முகமும் பரணியும் ஸ்கூல் ஓனரை சந்தித்து பேச, அவர் நான் கொடுக்க ரெடியாக தான் இருக்கேன், அந்த இடமே 1 கோடி போகும், நீங்க முதல்ல 50 லட்சம் கொடுங்க அதை நான் உங்களுக்கு எழுதி வச்சிடுறேன் என்று சொல்கிறார். அதிக பீஸ் வாங்காமல் ஸ்கூலை நடத்தணும் என்று சொல்கிறார்.

வீட்டிற்கு வந்த பரணி வீட்டை அடகு வைத்து பணத்தை வாங்க கிளம்பி செல்ல, வைகுண்டம் அந்த விஷயத்தை சண்முகத்துக்கு தெரிய படுத்த, அவன் ஏற்கனவே பரணிக்காக அடகு வைத்த விஷயம் அவளுக்கு தெரிய கூடாது என பதறி ஓடி வருகிறான்.

ஆனால் பரணி ஷண்முகம் பத்திரத்தை அடகு வைத்துள்ளவரையே சந்தித்து பணத்தை கேட்க, அவர் ஷண்முகம் ஏற்கனவே உனக்கான இந்த வீட்டை அடகு வைத்து இருக்கான் என்ற உண்மையை போட்டு உடைக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment