செருப்பை தூக்கிக்கொண்டு ஓடிய ஞானம்! முட்டாளாகிய குணசேகரன்..

by Lifestyle Editor

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியலை தற்போது கதிர் டிஆர்பி- எகிற வைத்துள்ளார். கதிர் மட்டுமின்றி ஞானம் இருவரும் அண்ணனுக்கு எதிராக மாறியுள்ளனர்.

ஜனனி சித்தார்த்திற்கும், தனது தங்கைக்கும் திருமணம் செய்து வைக்க குணசேகரனை முட்டாளாக்கிவிட்டு வீட்டைவிட்டு சென்றுள்ளனர்.

ஆனால் இவர்களின் திட்டத்திற்கு எதிர்த்து நிற்கும் குணசேகரன் என்ன திட்டம் வைத்துள்ளார் என்ற குழப்பத்தில் அதிகாரி காணப்படுகின்றார்.

தனது தம்பிகள் அனைவரையும் கைது செய்ய பொலிசாருக்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில், வீட்டில் இருந்த தர்ஷினியையும் காணவில்லை. இதனால் குறித்த திருமணம் யாருடன் நடக்கும்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.

Related Posts

Leave a Comment