முட்டை குழம்பு…

by Lifestyle Editor

தேவையான பொருட்கள் :

முட்டை – 4

பெரிய வெங்காயம் – 2

பழுத்த தக்காளி – 2

பச்சை மிளகாய் – 4

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 2 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

கருவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – சுவைக்கேற்ப

அரைக்க தேவையானவை :

துருவிய தேங்காய் – 3 டீஸ்பூன்

சோம்பு – 1/2 டீஸ்பூன்

தண்ணீர் – சிறிதளவு

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டுக்கொள்ளுங்கள்.

சோம்பு பொரிந்ததும் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.

இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி குழைந்து மென்மையாக வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்துக் கலந்து வதக்கிக்கொள்ளவும்.

மசாலாக்களின் பச்சை வாசம் போனவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

இதற்கிடையே ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், சோம்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

குழம்பு நன்றாக கொதித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

குழம்பு கொதிக்கும் போதே முட்டைகளை மெதுவாக குழம்பில் உடைத்து ஊற்றி மூடி போட்டு 5 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

முட்டை நன்கு வெந்தவுடன் குழம்பை கவனமாக கலந்து விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெடி.

இதை சூடான சாதம், தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Related Posts

Leave a Comment