CSK அணியில் இன்று முக்கிய மாற்றம்..

by Lifestyle Editor

ஹைதராபாத்தில் உள்ள உப்பல் மைதானத்தில் இன்றிரவு நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலரான வங்கதேசத்தை சேர்ந்த மமுஸ்தபிசுர் ரகுமான் சொந்த காரணங்களுக்கான இன்றைய போட்டியில் இருந்து விலகி உள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

சென்னை அணியை பொருத்தளவில் ரச்சின் ரவிந்திரா, டேரில் மிட்செல், மதீஷா பதிரனா மற்றும் முஸ்தபிசுர் ரகுமான் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இருந்து முஸ்தபிசுர் ரகுமான் விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகிஷ் தீக்சனா சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

உத்தேச சிஎஸ்கே அணி : ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே

நடப்பு சீசனில் இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆம் இடத்தில் உள்ளது.

Related Posts

Leave a Comment