இன்றைய ராசி பலன்(05-04-24)

by Lifestyle Editor

மேஷம்:

காதல் உறவில் இன்று உற்சாகம் மற்றும் இனிய அனுபவத்தை பெறலாம். நெருங்கிய நபர்களுடனான உறவை நீட்டிக்க உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது நேர்மையாக இருங்கள். பழைய நண்பர்களுடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்கும். எல்லோரும் கெட்டவர்கள் அல்ல என்பதை நினைவில் கொண்டு மற்றவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் பாராட்டுக்களை பெறுவீர்கள். அதிர்ஷ்ட அடையாளம் – சணல் பை அதிர்ஷ்ட நிறம் – இண்டிகோ அதிர்ஷ்ட எண் – 25

ரிஷபம்: காதல் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கம் நிலவும். உங்கள் உறவில் அன்பாக மற்றும் அக்கறையாக இருக்க முக்கியத்துவம் கொடுங்கள். இன்று நெருங்கிய நண்பர்களுடன் நேரம் செலவழிப்பீர்கள். வெளிப்படையாகவும் இருப்பதன் மூலம் உங்கள் உறவுகளில் நம்பிக்கையை வளர்த்து கொள்ளுங்கள். பணியிடத்தில் கவனமாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்படுங்கள். பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான வாய்ப்பு உண்டு.
அதிர்ஷ்ட அடையாளம் – மெட்டல் ஃபாயில் அதிர்ஷ்ட நிறம் – பர்பிள் அதிர்ஷ்ட எண் – 42

மிதுனம்:

உங்கள் உறவுகளில் இன்று தகவல் தொடர்பு சரியாக இருப்பது அவசியம். இல்லை என்றால் உங்கள் கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம். முக்கிய விஷயங்களில் முடிவெடுக்க நேர்ந்தால் உங்கள் உள்ளுணர்வு சொல்வதை நம்புங்கள். எதிர்கால சேமிப்பிற்கு இன்று முன்னுரிமை கொடுங்கள். உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி கடினமாக உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட அடையாளம் – கைவினைப் பொருட்கள்
அதிர்ஷ்ட நிறம் – ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண் – 17

கடகம்:

உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் இருந்த பிரச்சனைகள் இன்று நீங்கும். உறவுகளில் உங்கள் உணர்ச்சித் தொடர்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இன்று வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருக்கும் என்பதால், பொறுப்புடன் செலவு செய்து தேவையற்ற செலவுகளை தடுக்கவும். வேலையில் புதிய வாய்ப்புகளையும், சவால்களையும் நம்பிக்கையுடன் ஏற்று கொள்வது உங்களின் முன்னேற்றத்திற்கு உதவும்.

அதிர்ஷ்ட அடையாளம் – கற்றாழை செடி அதிர்ஷ்ட நிறம் – ஃபாரஸ்ட் கிரீன் அதிர்ஷ்ட எண் – 2

சிம்மம்:

காதல் உறவில் உள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உணர்ச்சிகரமான நாளாக இருக்கலாம். இன்று நீங்கள் சில கலாச்சார நடவடிக்கைகளில் பங்கேற்பீர்கள். உங்கள் நண்பர்களுடன் இன்று திட்டமிட்ட பயணத்தை ஒத்தி வைக்க நேரிடலாம். வணிகர்கள் தங்களின் எதிர்காலத்திற்காக தொழிலில் இன்று சில முக்கிய மாற்றங்களை செய்ய நேரலாம். சவாலான விஷயங்களில் உங்கள் திறன்களையும் அறிவையும் நம்பிக்கையுடன் வெளிப்படுத்துங்கள். வேலை தேடி கொண்டிருப்போருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம்.

அதிர்ஷ்ட அடையாளம் – மயில் தோகை அதிர்ஷ்ட நிறம் – நீலம் அதிர்ஷ்ட எண் – 3

கன்னி:

உறவில் உங்கள் பார்ட்னரின் உணர்ச்சிபூர்வமான தொடர்பை பேணுவது இன்று உங்கள் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கலாம். இதனை கட்டுப்படுத்தாவிட்டால் விரைவில் கடன் வாங்கும் சூழல் ஏற்படும். பணியிடத்தில் முன்னேற்றம் மற்றும் உயர்வுக்கான வாய்ப்புகள் தோன்றும். அமைதியாக மற்றும் நிதானமாக இன்று இருப்பது உங்களுக்கான பலன்களை முழுமையாக தரும்.

அதிர்ஷ்ட அடையாளம் – நீரூற்று அதிர்ஷ்ட நிறம் – கிரே அதிர்ஷ்ட எண் – 7

துலாம்:

உங்கள் காதல் வாழ்க்கையைஅமைதியாக கொண்டு செல்ல உங்களின் மனதில் இருப்பதை துணையிடம் நேர்மையாக வெளிப்படுத்துங்கள். இன்று உங்கள் நண்பர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குவது உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். வணிகர்கள் தாங்கள் தொழிலில் புதிய முன்னேற்றம் காண்பது இன்று சாத்தியமாகும். மிதமான ரிஸ்க் எடுத்து இன்று கிடைக்கும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – லாடம் அதிர்ஷ்ட நிறம் – பிங்க் அதிர்ஷ்ட எண் – 4

விருச்சிகம்:

இன்று நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இருப்பதன் மூலம், உங்கள் உறவுகளை வலுப்படுத்த முடியும். உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்குத் தேவை என்றால் யோசிக்காமல் உடனடியாக கை கொடுங்கள். வணிகர்கள் தலத்து தொழிலை முன்னேற்றும் முயற்சியில் நம்பகமான நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்படலாம்.இன்று அவசர முதலீடுகளைத் தவிர்த்து கொள்வது நல்லது. சுய-கவனிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மன ஆரோக்கியத்தை பார்த்து கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளை நிற ஆடைகள் அதிர்ஷ்ட நிறம் – ஆம்பர் ஆரஞ்சு அதிர்ஷ்ட எண் – 8

தனுசு:

உங்கள் உறவில் இன்று உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உறவுகளுக்கு மதிப்பு கொடுங்கள். தூண்டுதலின் பேரில் அல்லது ஆர்வத்தில் செலவழிப்பதை இன்று தவிர்க்கவும். புதிய சவால்களை தயங்காமல் ஏற்று கொண்டு உங்கள் திறமைகளை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துங்கள். குறிப்பாக உங்கள் சிந்தனைக்கு சவால் விடும் செயல்களில் பங்கேற்று வெற்றி காண்பீர்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – பெரிய காஃபி மக் அதிர்ஷ்ட நிறம் – லிலாக் அதிர்ஷ்ட எண் – 12

மகரம்:

உங்கள் உறவில் உறுதியான அடித்தளம் அமைப்பதில் இன்று உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள். இன்று நீங்கள் ஆற்றலாகவும், மகிழ்ச்சியையும் உணர்வதில் உங்கள் நட்பு வட்டம் முக்கிய பங்கு வகிக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்க நீண்ட கால நிதி பாதுகாப்பு குறித்து சிந்தித்து முடிவெடுங்கள். உங்கள் லட்சியத்தை நோக்கி செல்ல அர்ப்பணிப்பு உணர்வை பேணுங்கள் மற்றும் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுங்கள்.

அதிர்ஷ்ட அடையாளம் – ஆலமரம் அதிர்ஷ்ட நிறம் – ஆலிவ் கிரீன் அதிர்ஷ்ட எண் – 9

கும்பம்:

இன்று தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்ள வேண்டும். உங்கள் துணை மிகவும் சென்சிட்டிவானவர் என்றால் அவர்களின் நம்பிக்கையை பெற முயற்சிகள் செய்யவும். வணிகர்களுக்கு தொழிலில் சாதகமான முன்னேற்றங்கள் ஏற்படலாம். புதுமை மற்றும் வழக்கத்திற்கு மாறான சிந்தனை உங்களுக்கு இன்று வெற்றியை தரும். உங்களின் அறிவாற்றலைத் தூண்டும் மற்றும் அறிவை மேம்படுத்தும் செயல்களில் பங்கேற்கவும்.

அதிர்ஷ்ட அடையாளம் – களிமண் பொம்மை அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு அதிர்ஷ்ட எண் – 21

மீனம்:

உறவுக்குள் இருந்து வரும் தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகளை தீர்க்க நினைப்பவர்கள் இன்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். உங்கள் உதவி தேவைப்படுபவர்களுடன் இணைந்திருங்கள். வெளியிடங்களில் பணத்தை கையாளும் போது கவனமாக இருங்கள். உங்கள் எதிர்கால நிதி பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். பணியில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு.புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர கூடும்.

அதிர்ஷ்ட அடையாளம் – வெள்ளி நாணயம் அதிர்ஷ்ட நிறம் – கோல்ட் அதிர்ஷ்ட எண் – 30

Related Posts

Leave a Comment