பெங்களூரு, குஜராத் அணிகள் தொடரிலிருந்து மகளிர் ஐபிஎல் வெளியேற்றம் …

by Lifestyle Editor

மகளிர் ஐபிஎல் தொடரிலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் குறைவான வெற்றிகளை பெற்ற நிலையில் இரு அணிகளும் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. மும்பை, யு.பி. வாரியர்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை அடுத்த சுற்றான ப்ளே ஆஃப்-க்கு முன்னேறியுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து மகளிருக்கான 20 ஓவர் லீக் போட்டிகள் நடப்பாண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 4 ஆம் தேதி முதல் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், யு.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன. லீக் சுற்றுகள் இன்றுடன் முடியவுள்ள நிலையில் வரும் வெள்ளியன்று ப்ளே ஆஃப் சுற்று தொடங்கவுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் குஜராத்தை தவிர்த்து மற்ற 4 அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடியுள்ளன.

மும்பை, டெல்லி அணிகள் தலா 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளைப் பெற்றபோதும், நெட் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. யு.பி. வாரியர்ஸ் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளது. கடைசி 2 இடங்களை பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இன்று நடைபெறும் 2 ஆட்டங்களின் முடிவைப் பொருத்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் அணி எது? ப்ளே ஆஃபில் மோதும் அணிகள் எவை என்பது தெரியவரும். இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு மும்பை அணியையும், யு.பி. வாரியர்ஸ் டெல்லி கேபிடல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன.

Related Posts

Leave a Comment