பெங்களூரு அணியின் புதிய கேப்டன் ஃபாப் டுபெலிசிஸ் ?

by Column Editor

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 26-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. 10 அணிகள் பங்கேற்பதால் இந்த சீசனுக்கான போட்டி முறைகள் மாறுதல் செய்யப்பட்டு இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் மும்பை, புனேயில் நடை பெறுகிறது.

இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ்அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை 9 அணிகளும் கேப்டன் யார் என்பதை அறிவித்துவிட்டனர். ஆனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மட்டும் இன்னும் கேப்டன் யார் என்பதை அறிவிக்கவில்லை. பெங்களூர் அணிக்கு கடந்த காலங்களில் கேப்டனாக இருந்த விராட் கோலி ஐ.பி.எல். கேப்டன் பொறுப்பை விட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஃபாப் டுபெலிசிஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுபவமிக்க வீரரான டுபெலிசிஸ் தென் ஆப்ரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். எனவே அவரையே கேப்டனாக நியமிக்க பெங்களூரு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அல்லது ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரரான்ன கிளென் மேக்ஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

9 அணிகளின் கேப்டன்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்- டோனி, மும்பை இந்தியன்ஸ்- ரோகித்சர்மா, டெல்லி கேப்பிட்டல்ஸ்- ரி‌ஷப்பண்ட், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-ஸ்ரேயாஸ் அய்யர், ராஜஸ்தான் ராயல்ஸ்-சஞ்சு சாம்சன், பஞ்சாப் கிங்ஸ்- மயங்க் அகர்வால், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- லோகேஷ் ராகுல், குஜராத் டைட்டன்ஸ்- ஹர்திக் பாண்ட்யா.

Related Posts

Leave a Comment