இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா..! 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

by Lifestyle Editor

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்திருந்தது.

முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து இருந்தார். அதே போல் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்பன் கில் சதம் அடித்து அசத்தியிருந்தார்.

இங்கிலாந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 253 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி பெற 398 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்களையும் இழந்து 292 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் பும்ரா, அஸ்வின் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.

Related Posts

Leave a Comment