ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்…

by Lifestyle Editor

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே அரிசியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அந்தவகையில், சென்னையில் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்களாக பருவமழை தவறியது, குறைவான விளைச்சல், மிக்ஜாம் புயல் ஜனவரியில் வீசிய பலமான காற்று போன்றகளால் விளைச்சல் குறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இதனால் நெல் விலையும் அதிகமாகிவிட்டது. எனவே,
அடுத்த 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகள் கடந்த ஜனவரி மாதமே கணித்து கூறியிருந்தனர்.

மேட்டூர் அணையும் மூடப்பட்டு, சம்பா சாகுபடிக்கு மழையும் கைகொடுக்காமல் டெல்டா விவசாயிகள் அவதிப்படுகின்றனர். இவையெல்லாம்தான் தமிழகத்தில் அரிசி விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.

இதனால் சென்னையில் மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, கிலோ ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்துள்ளது. பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கும், பழுப்பு அரிசி ரூ.39-க்கும் விற்பனையாகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆகவும், பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரையும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ. 17 வரை எகிறியது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அரிசியின் விலை உயர்ந்து வந்த நிலையில், இப்போது விலை குறைந்து வருகிறதாக கூறப்படுகிறது. அரிசி போன்ற பொருள்களுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து நெல் வரத்து அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் தற்போது கோடை விளைச்சலும், சந்தைக்கு வர தொடங்கிவிட்டதால், அரிசியின் விலையில் மாற்றம் தென்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது. விலையும் குறைந்து தொடங்கியுள்ளது. அதன்படி அரிசியின் விலையை சீராக வைத்திருப்பதற்காக மத்திய அரசு அரிசி இருப்பு அளவை கண்காணித்தும் வருகிறது.

அதன்படி, ஒரு கிலோ புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 8 வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அரிசியின் விலை திடீரென குறைந்துள்ளதால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஆனால், கடந்த 6 மாதங்களை எடுத்துக்கொண்டால், எவ்வளவுதான் அரிசி விலை உயர்ந்தாலும், தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளதாகவும், அமைச்சர் பெரிய கருப்பன் கூறியிருந்தார்.

அதற்கேற்றவாறு, தற்போதுவரை ரேஷனில் அரிசிக்கு தட்டுப்பாடும் இல்லாமல் சீராக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரிசி விலை குறைந்துள்ளதால், ரேஷனிலும் எந்த தட்டுப்பாடு வர வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. அந்தவகையில், ரேஷன் அரிசி தாரர்களுக்கும், நிம்மதி ஏற்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment